0
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா – 300 கிராம்
தக்காளி – 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 3 பல் (நறுக்கியது)
அரிசி கழுவிய தண்ணீர் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
கொத்தமல்லி – சிறிது
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது
பிரியாணி இலை – 1
அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் மட்டன் கைமாவை நீரில் 2 முறை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் 2 முறை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும்.
- பிறகு மட்டன் கைமாவை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
- அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் அரிசி கழுவிய நீர் மற்றும் சாதாரண நீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கவும்.
- அதற்குள் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- விசிலானது போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்த தேங்காய் சேர்த்து, கிரேவிக்குத் தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து 0 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், மட்டன் கைமா கிரேவி தயார்.
நன்றி | Tamilbeauty