0
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ
- தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க! ஹோட்டலில் மட்டும் எப்படி உணவோட சுவை வேற லெவலில் இருக்கு? அந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க!
- சோம்பு – 2 டீஸ்பூன்
- பட்டை – 1 துண்டு
- ஏலக்காய் – 4
புதினா தொக்குபுதினா தொக்கு
- கிராம்பு – 4
- பிரியாணி இலை – 1
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 3 (அரைத்துக் கொள்ளவும்)
- காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
- முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
- அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
- பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காய மசாலா தயார்.
நன்றி | Tamilbeauty