0
தேவையான பொருட்கள்:
- பூண்டு – 6 பல்
- ஓமம் – 2 டீஸ்பூன்
பெப்பர் சிக்கன் ட்ரை பெப்பர் சிக்கன் ட்ரை
- கடலை மாவு – 2 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீத்தாப்பழம் மில்க் ஷேக்சீத்தாப்பழம் மில்க் ஷேக்
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு மற்றும் ஓமத்தைப் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி வைத்துள்ள சாற்றினை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிந்து, நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
- இதேப் போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்து குளிர வைத்து, பின் கையால் நொறுக்கி விட்டால், பூண்டு ஓம பொடி தயார்.
நன்றி | Tamilbeauty