0
தேவையான பொருட்கள்:
- கனிந்த பலாப்பழ துண்டுகள் – 12
- வெல்லம் – 1/2 கப்
- தண்ணீர் 1/4 கப்
- கெட்டியாக தேங்காய் பால் – 3/4 கப்
- நெய் – 3 டீஸ்பூன்
- முந்திரி – சிறிது
- பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
- அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அந்த வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- பாயாசமானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும்.
- இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் தயார்.
குறிப்பு:
- விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பால் பாதியும், காய்ச்சிய பால் பாதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் பால் சேர்த்ததும் கொதிக்க வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாயாசம் திரிய ஆரம்பித்துவிடும்.
- பாயாசத்தின் சுவையை இன்னும் அதிகரிக்க நினைத்தால், அதிகமாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி | Tamil Beauty