25
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
காளான் குருமாகாளான் குருமா
- உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
சுவையான… முட்டைக்கோஸ் சட்னிசுவையான… முட்டைக்கோஸ் சட்னி
- வரமிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 5 பல்
- கத்திரிக்காய் – 4 (பெரியது மற்றும் நீளமாக துண்டுகளாக்கப்பட்டது)
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
- பின்பு கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
- கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
- மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் தயார்.
நன்றி | Tamil Beauty