மிகவும் சுவையான காலை உணவுக்கு அனைவருக்கும் பிடித்த எளிமையான புளிச்சோறு செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள்
- சோறு- 1சுண்டு அரிசி
- கத்தரிக்காய் – 1 சிறியது
- உருளை கிழங்கு – 2 சிறியது
- வெங்காயம் – 2 சிறியது
- லீக்ஸ் -1/2 சிறியது
- கறிவேப்பில்லை – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 5 சிறியது
- பெருஞ்சிரகம் -1/2 தேநீர் கரண்டி
- சின்ன சீரகம் – 1/2 தேநீர் கரண்டி
- கடுகு -1 தேநீர் கரண்டி
- பருப்பு கடலை -1 தேநீர் கரண்டி
- புளி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கத்தரிக்காய் உருளை கிழங்கு இரண்டையும் பொறியலுக்கு ஏற்றது போல் வெட்டி கொள்க.
லீக்ஸ்,வெங்காயம் ,பச்சை மிளகாய் தாளிப்புக்கு ஏற்றது போல வெட்டி கொள்ளவேண்டும்.
சோற்றை நல்ல உதிரியாக சமைத்து எடுத்து கொள்க.
இப்பொது வெட்டி வைத்த கத்தரிக்காய் , உருளை கிழங்கை பொறித்து எடுத்து வைக்கவும்.
தளிப்புக்காக சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு கடலை பருப்பு பெரிய சின்ன சீரகம் போட்டு பின் வெங்காயம் லீக்ஸ் மிளகையையும் கொட்டி தாளித்து கொள்க
மஞ்சள் தூள் சிறுது தேவையான உப்பையும் சேர்க்கவும்.
பின்னர் புளியையும் கரைத்து அதற்குள் விடுக புளி நன்றாக கொதிக்கும் போது பொறித்து வைத்த கத்தரிக்காய் உருளை கிழங்கையும் போட்டு புளியில் ஊறி கொதி ஒன்று வர சோற்றை இட்டு நன்றாக கிளறி விடவும்.
இப்போது புளிச்சோறு தயார்.
– N.Dilzka –