பூரி கிழங்கு இதை காலை உணவாகவோ , இரவு உணவாகவோ நாம் செய்து சாப்பிடலாம் இதன் சுவையை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.பாடசாலைக்கு கொடுத்து விடவும் இது நல்ல உணவாகும்.
தேவையான பொருட்கள்
கோதுமை – 1 சுண்டு
தயிர் – 1தேநீர் கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உருளை கிழங்கு -4 சிறியது
வெங்காயம் – 3 சிறியது
பச்சை மிளகாய் – 4 சிறியது
மஞ்சள் தூள் -தேவையான அளவு
கடுகு -தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவை இட்டு அதில் சிறிது உப்பு தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து பின் தண்ணீர் ஊற்றி நன்றாக மாவை பிடித்து வைத்து கொள்ளவும் .
பின் 1 மணித்தியாலங்கள் வைத்து விட்டு
கிழங்கை தயார் செய்யவும் உருளை கிழங்கை நன்றாக அவித்து எடுத்து கொள்ள வேண்டும்
வெங்காயம் ,மிளகாய் , போன்றவற்றை நடுத்தர அளவில் வெட்டி எடுக்கவும் .
எண்ணெய்யை சட்டியில் இட்டு சூடாகியதும் வெங்காயம், மிளகாய்,கடுகு இட்டு தாளிக்கவும் பின் அவித்த கிழங்கை தோல் நீக்கி மசித்து தாளிப்புக்குள் போட்டு தேவையான உப்பு, மஞ்சள் , மிளகுத்தூள் போட்டு சிறுது நீர் விட்டு ஒரு கொதி வர இறக்கவும் .
பின்னர் பிடித்து வைத்த மாவை சிறிய உருண்டையாக பிடித்து சின்ன வட்டங்களாக அமைத்து கொதிக்கும் எண்ணெய்யில் ஒன்று ஒன்றாக போட்டு எடுக்கவும் .
இதோ பூரி கிழங்கு தயார்.
-N.Dilzka-