சுவைப்போம் மகிழ்வோம் பகுதி -1
கடல் உணவுகளில் சுவையானதும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு தான் இறால் என்பது தெரிந்ததே அத்தகைய இறாலை வைத்து எப்படி ஒரு சுவையான இறால் குழம்பை செய்யலாம் என்று பார்ப்போம்.
வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த இறால் குழம்பை ஒரு சிறிது நேரத்தில் செய்துவிடலாம்
தேவையான பொருட்கள்
இறால் – 1 / 2kg
புளி-தேவையான அளவு
மிளகாய் தூள் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 நெட்டி
வெங்காயம் – 2சிறியது
பூண்டு – 4 பல்லு
இஞ்சி -சிறிய துண்டு
தேங்காய் பால் அரை மூடி அளவு 1 ம் ,2 ம் பால்
செய்முறை :
சுத்தம்செய்து இறாலை எடுத்து கொள்க அதில் மிளகாய் தூள், உப்பு மஞ்சள் சிறியளவு போடாமல் விட்டாலும் பராவாயில்லை இஞ்சி ,பூண்டு இரண்டையும் நன்கு அரைத்து எடுக்கவும் அதையும் இதனுடன் சேர்க்கவும்.இவற்றை நன்றாக ஊற விடவும் .
பின்னர் சட்டியினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வெட்டிய வெங்காயம், கடுகு, பெரிய சீரகம், சின்ன சீரகம், வெந்தயம் சேர்த்து வதங்கி வரும் போது சேர்த்து வைத்த இறாலை அதில் போட்டு அவிய விடவும் பின் 10 நிமிடம் கழித்து 2 ஆம் பால் விட்டு ஒரு பெரிய கொதி வந்தவுடன் 1 ஆம் பாலில் புளியை கரைத்து விடுக இப்பொது ஒரு சிறிய கொதி வர குழம்பை இறக்கி விடவும். நல்ல வாசனையாக இருக்கும் இந்த இறால் குழம்பை சோறுடன் அல்லது புட்டுடன் பரிமாறலாம் இதை உங்கள் வீடுகளில் நீங்களும் செய்து மகிழுங்கள்.
இறால் குழம்பு தயார்.
-N.dilzka-