சுவைப்போம் மகிழ்வோம் பகுதி-2
கணவாய் மிகவும் சுவையான உணவுகளில் ஒன்று சிறார்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. கணவாய் நிறைந்த புரதமும் கல்சியம் போன்றவற்றை கொண்டது.கணவாயில் கறி ,குழம்பு , பொறியல் என்று பல உணவுகளை செய்யலாம் நாம் இன்று கணவாய் வைத்து பால் கறி ஒன்று செய்வோம்.
அதற்கு தேவையான பொருட்கள்
கணவாய்-1/2kg
மிளகாய் – 4
வெங்காயம் – சிறியது 4
மஞ்சள் தூள் -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 1/2 மூடி
தேசிக்காய் – 1
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிள்ளை
கடுகு
பெரிஞ்சீரகம்
மிளகுதூள்
தேங்காய் எண்ணைய் தேவையான அளவு
செய்முறை
முதலில் கணவாயை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்க.
சட்டியை அடுப்பில் வைத்து நன்றாக காய விட வேண்டும்
அதன் பின்னர் எண்ணெய் ஊற்றி சூடாக்குக
தாளிப்பதற்காக கடுகு, சீரகம், கறிவேப்பிளை,வெங்காயம் ,மிளகாயை போடுக பின்னர் கணவாயையும் சேர்த்து நன்றாக கிளரி விடுக தேவையான உப்பை சேர்த்து மஞ்சளையும் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
10 நிமிடம் நன்றாக அவிய விட்டு பின்னர் தேங்காய் பாலை விட்டு மிளகு தூள் சிறிதளவையும் விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் இறக்குமளவில் தேசிப்புளியை விட்டு கிண்டி கறியை விட வேண்டும் .
கறி தயாராகி விட்டது.
N.Dilzka