சுவைப்போம் மகிழ்வோம்
இனிப்பு உணவுகளில் ஒன்றான பெரும்பாலானவர் விரும்பும் உணவாகவும் காணப்படுவது தொதல் ஆகும் அதை இன்று எப்படி செய்வதென்று பாப்போம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு பச்சை அரிசி – 1 சுண்டு
சக்கரை -1/2kg
சீனி -1 சுண்டு
தேங்காய் 4 எடுத்து கட்டி பாலாக எடுத்துக்கொள்ள வேண்டும்
ஏலக்காய் -சிறிய பக்கட்
கச்சான் – 50g
ஜவ்வரிசி – சிறிது
செய்முறை
முதலில் அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து வடித்து நன்றாக அரைத்து மாவாக்கி கொள்ள வேண்டும். சக்கரையை 1 1/2 கப் சுடுநீர் விட்டு கரைத்து வடித்துக்கொள்ளவேண்டும் .கச்சானையும் துப்பரவு செய்து எடுக்க வேண்டும் .
ஏலக்காயை வறுத்து இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும் . பின் நன்றாக அடுப்பை எரித்து அகலமான சட்டியை வைத்து தேங்காய் பால் ,அரிசி மா, சக்கரை நீர் ,சீனி இவற்றை கட்டி படா வன்னம் கலந்து நன்கு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
அடுப்பின் சூடு மீதமாக வைத்து கிண்டல் மிக நல்லது குறைந்தது 2 மணி நேரம் வரை அடி பிடிக்காது கிண்டிவிடவும் பின் ஜவ்வரிசி ,கச்சான் , ஏலக்காய் தூள் ஆகியவற்றை நன்கு விட்டு எண்ணை வரும் வரை கிண்டி எடுக்கவும். பின் தட்டை பாத்திரத்தில் கொட்டி பரவி அடுத்த நாள் வெட்டி சாப்பிடவும் நல்ல சுவையான தொதல் தயார் .
-N.DILZKA –