புளிபொங்கல் சமைப்போம் சுவைப்போம்
புளிபொங்கல் மிகவும் ஆரோக்கியமானதாகவும். சிறுவர் பெரியவர் என்று அனைவரும் சுவைத்து விரும்பி உண்ணும் உணவாக கருதப்படுகிறது. இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் அதிகமாக தமிழ் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 200 கிராம்
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
காய்ந்த மிளகாய் – 2
கடுகு
கடலைப்பருப்பு
மஞ்சள்தூள்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 100ML
உப்பு – தேவையான அளவு
அனைவருக்கும் பிடித்த எளிமையான புளிச்சோறு செய்து பாருங்கள்
செய்முறை
பச்சரிசி உப்புமா ரவையை போன்று மிக்ஸியில் போட்டுஉடைத்து வைக்கவும் . புளியைக் கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளி மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் அரிசி ரவையை சேர்க்கவும். புளிக்கரைசலும், தண்ணீரும் சேர்த்து ரவையின் அளவுக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, ஊற்றிக் கிளறி, அடுப்பை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இதற்கு பொரித்த அப்பளம், வடகம் சிறந்த காம்பினேஷன்.