பல விதமான சொதிகள் இருக்கும் போது இப்படியான புதிய சொதியை செய்து பாருங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பாசிப்பயறு சொதி புதுமையான சொதி வகை
தேவையான பொருள்
பாசிப்பருப்பு – 100 g
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – 1 கப்
சின்ன வெங்காயம் – 12
தேங்காய் -1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 6
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங் காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.