இடியப்பத்தை சிலர் அப்படியே உண்ண விரும்புவதில்லை எனவே அப்படியானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சுவையாக உண்ண இதை போல் இடியப்ப கொத்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் -4
கறி மிளகாய் – 2
வெங்காயம் – 2
கரட் -2
உப்பு தேவையான அளவு
கோவா பாதி
இடியப்பம் ஒரு கோப்பை
பூண்டு 4 பல்
எண்ணை
வெட்டு தூள்
செய்முறை
முதலில் மரக்கறிகளை (பச்சை மிளகாய், கறி மிளகாய் , வெங்காயம் , கரட் , கோவா,பூண்டு) கழுவி சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணையை சிறிதளவு விட்டு வெட்டிவைத்த மரக்கறிகளை போட்டு அதில் தேவையான அளவு உப்பு , வெட்டு தூள் நன்கு கிழறி விடவும் நன்கு பொறித்ததும். முட்டையையும் சேர்த்து இடியப்பத்தை கைகளால் துண்டுகளாக உதிர்த்து அதனுடன் சேர்த்து விடவும் . இப்போது அதனை கறிகளுடனும் பரிமாறலாம்.