தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
சுக்குப் பொடி – கால் ஸ்பூன்
கருப்பட்டி – கால் கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
செய்முறை
கருப்பு உளுந்தை நன்றாக அலசி அரை மணி நேரம் மட்டும் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு அல்லது உளுந்து வேகும் வரை விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து ஆறியவுடன், அதை மட்டும் மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மற்றும் உளுந்து வேகவைத்த தண்ணீர் சேர்த்து கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அதில் தேங்காய்ப்பால், கருப்பட்டியை பாகாக்கி சேர்த்து அனைத்தும் சேர்ந்து கொதித்தவுடன், சுக்கு, ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவேண்டும்.
கருப்பட்டிக்கு பாகு பதம் தேவையில்லை. நன்றாக தண்ணீரில் கரைந்து வந்தாலே போதும். இந்த கருப்பட்டி சேர்த்த கருப்பு உளுந்து பால் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு அது கருப்பை ஆரோக்கியம், மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்வது என உதவுகிறது.
கருப்பு உளுந்தின் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.
கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.
கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.
கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.
உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.
உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது.
மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.
உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.