இங்கிலாந்தில் கர்ப்பமாகி 24 வாரங்களுக்கு முன்பு (5 அரை மாதங்கள்) கருச்சிதைவுக்கு உள்ளாகி குழந்தையை இழந்த பெற்றோர்கள், தங்கள் இழப்பை அங்கீகரிக்கும் சான்றிதழை தற்போது பெறலாம்.
பொதுவாக பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து, 38 வாரங்களில் குழந்தை பிறப்பு நிகழும்.
24 வாரங்களுக்கு முன் கர்ப்ப இழப்பு அல்லது கருச்சிதைவு என்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான சிக்கலாகும். இது இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு நிகழ்கின்றது.
கர்ப்பம் முடிந்த 24 வாரங்களுக்குப் பிறகு இறந்து பிறக்கும் குழந்தைகள் “இறந்த பிறப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும், அவர்களின் இறப்புகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், 24 வாரங்களுக்கு முன் குழந்தை இழப்பு அல்லது கருச்சிதைவு ஏற்பட்டால், இதுவரை காலமும் அது இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது.
எனினும், கருச்சிதைவு போன்ற வலிமிகுந்த அனுபவத்தை அனுபவித்த இங்கிலாந்து பெற்றோர்கள் தங்கள் இழப்பை அங்கீகரிக்கும் சான்றிதழை தற்போது பெறலாம்.
இலட்சக்கணக்கான குடும்பங்கள் இறுதியாக தங்கள் குழந்தை இருப்பதை முறையான ஒப்புதலைப் பெறுவார்கள் என்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் குழந்தை இழப்பை அனுபவித்த பெற்றோர்கள் அனைவரும் https://www.gov.uk/ என்ற இணையதளத்திற்குச் சென்று இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 16 வயதை பூத்திசெய்தவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், குழந்தை இழப்பின் போது அவர்கள் இங்கிலாந்தில் வசித்திருக்க வேண்டும்.
மேலும், இழந்த குழந்தையின் பெற்றோரில் ஒருவராக அல்லது மாற்றுத் திறனாளியாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேல்ஸில், இதேபோன்ற திட்டத்தை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. ஸ்காட்லாந்தில் மக்கள் தங்கள் 24 வாரத்திற்கு முந்தைய இழப்புகளைப் பதிவுசெய்யக்கூடிய நினைவுப் புத்தகம் ஏற்கனவே தயாராகி வருகிறது.