செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தேர்தலை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் கலைப்பு

தேர்தலை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் கலைப்பு

0 minutes read

எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள இந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், 14 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்த்தரப்பான தொழிலாளர் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 650 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது. அதையொட்டி 5 வாரப் பிரசாரம் அதிகாரபூர்வமாக இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மீண்டும் களமிறங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அவர்களில் 77 பேர் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், ஜூலையில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக பல உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் தேர்தல் இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக், ஜூலை 4ஆம் திகதி தேர்தல் என்று கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More