தென் இந்தியாவின் புனிதர் எனப் போற்றப்படும் தமிழ் கவிஞர் திருமங்கையாழ்வாரின் சிலை ஒன்று, இங்கிலந்தின் ஒக்ஸ்ஃப்ர்ட் நகரில் அமைந்துள்ள Ashmolean அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
16ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சுமார் 60 செண்டிமீட்டர் உயரம்கொண்ட இந்த வெண்கல சிலையைக் கொடுக்கும்படி இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கோவில் ஒன்றில் இருந்த இந்தச் சிலை திருடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனையடுத்து, இந்தச் சிலையை இந்தியாவுக்குத் திரும்ப கொடுக்கப்போவதாக Oxford பல்கலைக்கழகத்தின் மன்றம் முடிவெடுத்துள்ளதாக அருங்காட்சியகம் அறிவித்தது.
எனினும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து நன்கொடை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.