தேசியப் பாதுகாப்புத் தகவலைப் பெறுவதற்கும் பரப்புவதற்கும் சதி செய்த குற்றச்சாட்டை Wikileaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), இன்று (26 ) ஒப்புக்கொண்டதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது.
அவருக்கு ஐந்து ஆண்டு, இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இங்கிலாந்தில் அவர் சிறையிலிருந்த நாள்களும் கணக்கில் கொள்ளப்பட்டதால், அசாஞ் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
அசாஞ்சின் தலைமையில் 2010ஆம் ஆண்டிலிருந்து ஆயிரக்கணக்கான இரகசிய அமெரிக்க ஆவணங்கள் கசிந்தன. அதன் தொடர்பில் அவர் 14 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தை எதிர்நோக்கினார்.
அதேவேளை, அசாஞ் விடுதலை செய்யப்பட்டதை ஐக்கிய நாட்டு நிறுவனமும் மனித உரிமைக் குழுக்களும் வரவேற்றுள்ளன.