பிரான்ஸின் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பாராவிதமாக இடசாரி New Popular Front கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரதமர் கேப்ரியல் அட்டால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தீவிர வலசாரிக் கட்சியான தேசியப் பேரணி, நாடாளுமன்றத்தை அமைக்க அறுதிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியது. எனினும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்யப் பதவியில் தொடரும்படி ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் மத்திய Ensemble கூட்டணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தீவிர வலசாரியான தேசியக் கூட்டணி மூன்றாம் இடத்தில் வந்தது. New Popular Front, தேசியக் கூட்டணி, Ensemble கூட்டணி ஆகிய மூன்றும் இதுவரை இணைந்து செயல்பட்டதில்லை.
எனவே, பிரான்ஸில் தொங்கு பாராளுமன்றச் சூழல் நிலவுகிறது. இது பிரெஞ்சு பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்களிப்பாகும்.
ஒரு மாதத்துக்கு முன் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தேர்தலை அறிவித்தார். ஒரு வாரத்துக்குமுன் நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பில் தீவிர வலசரியான தேசியக் கூட்டணி முன்னணி வகித்தது. அதையடுத்து இடசாரி, மத்தியக் கட்சி வேட்பாளர்கள் அண்மை வாக்களிப்பின்போது பல இடங்களில் போட்டியிலிருந்து விலகினர்.
அதன் விளைவாக தேசியக் கூட்டணிக்கு எதிரான எதிர்த்தரப்பு வேட்பாளருக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்தன.