அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் அனைத்துலகச் செய்தி நிறுவனமான CNN தொலைக்காட்சி, அதன் 100 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையச் செய்திக்கான வர்த்தகத்தை வளர்க்க அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது. அதாவது, செய்தி சேகரிக்கும் பிரிவையும் இணையச் செய்திப் பிரிவையும் ஒருங்கிணைக்கவிருப்பதாக CNN Worldwide நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் தாம்ப்சன் ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
உலகெங்கும் CNN செய்தி நிறுவனத்தில் மொத்தம் 3,500 பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் 100 பேர் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று நிறுவனத்துக்குள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தைப் பார்த்த ராய்ட்டர்ஸ் அது குறித்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.