செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா Starlink இணைய சேவை; இலங்கை வரும் எலோன் மஸ்க்

Starlink இணைய சேவை; இலங்கை வரும் எலோன் மஸ்க்

0 minutes read

உலக கோடிஸ்வரர் பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதாக எலோன் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த இணைய வசதிகளை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி : எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்றிட்டம் விரைவில் இலங்கையில்!

Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, எலோன் மஸ்க்கின் இலங்கை விஜயம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More