கடந்த ஒரு மாதமாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதுடன் லேசான மண்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் இன்று(30) அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுத்தடுத்து 3 இடங்களில் மிகப்பெரிய மண்சரிவுகள் ஏற்பட்டன.
வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த மண்சரிவில் சிக்கிய, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணுக்கடியில் புதைந்தனர்.
இரவு நேரம் மற்றும் மழை பாதிப்பு காரணமாக மீட்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்க முடியாத நிலையில், உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது.