வட மேற்கு இங்கிலாந்து, சவுத்போர்ட் (Southport) நகர நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மரணித்த 3 சிறுமிகளுக்கு நீதி கோரி பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனால் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100க்கும் அதிகமானோரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சவுத்போர்ட் போராட்டங்கள் மேலும் பரவி வருவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சவுத்போர்ட் பொலிஸ் அதிகாரிகளை இங்கிலாந்து பிரதமர் சந்தித்து, நிலைமைகளை ஆராந்தார்.
அத்துடன், “அமைதியான போராட்டத்திற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். என்றாலும், வெறுப்பை விதைப்பதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் முழுப் பலத்தையும் எதிர்கொள்வார்கள் என்பதில் அவர் [பிரதமர்] தெளிவாக உள்ளார்” என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து; மூன்றாவது சிறுமி மரணம்; வன்முறை வெடித்தது!