செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு Bradford வீட்டில் தீ; மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் மரணம்!

Bradford வீட்டில் தீ; மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் மரணம்!

0 minutes read

இங்கிலாந்து, Bradford நகரில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகளும் பெண் ஒருவரும் மரணித்துள்ளனர்.

சம்வபத்தையடுத்து, கொலை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (21) பிற்பகல் 02 மணியளவில் Westbury வீதியில் உள்ள குறித்த வீட்டில் ஏற்பட்ட தீ தொடர்பில் தீயணைப்பு சேவையால் West Yorkshire பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

29 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், ஒன்று மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் ஐந்து வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்தில் 39 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More