இந்தியாவின் தெற்கு பகுதிகளில் பருவ மழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 25 பேர் மரணித்துள்ளனர்.
இதில் தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9 பேரும் மரணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 4,000 வீடுகள் சேதமடைந்ததால், அவ்வீடுகளில் வசித்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் உதவி தேவைப்படுவோரை மீட்கப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய நிலையை தேசியப் பேரிடராய இந்திய மத்திய அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
கரையோர வட்டாரங்களில் அடுத்த 24 மணி நேரம் கன மழை தொடர்ந்து பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.