குளிர் காலகட்டத்தில், சூரியஒளி படந்திருக்கும் தீவுகளுக்கு பயணிக்கத் திட்டமிட்டிருக்கும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு ஒரு மிகழ்ச்சியான செய்தியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அதாவது, விலையுயர்ந்த விசாக்களை இலங்கை இரத்துச் செய்வதன் மூலம் சுமார் £152 வரை இங்கிலாந்து குடும்பம் சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நெறிப்படுத்தப்படும் ‘ஒன்-சாப்’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாட்டினருக்கு விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விசா கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்குவதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த புதிய விசா இல்லாத கொள்கை ஒக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
கொரோனா தொற்று, 2019 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மற்றும் காலிமுகத்திடல் எழுச்சி ஆகிய மூன்று தாக்கங்களுக்குப் பிறகு இலங்கை தனது சுற்றுலாத் துறையை புதுப்பிக்க எடுக்கும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.