81 வயதுடைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் களமிறங்கினாலும், பின்னர் வயது முதிர்வு காரணமாகவும் கமலா ஹாரீஸை ஆதரித்து ஒதுங்கிக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களில் எடுத்த விடுமுறைகள் குறித்த தகவல் குடியரசுக் கட்சியின் RNC ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவர் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். அதாவது, அவர் பதவிக்காலத்தில் 40 சதவீத நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார். இது ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அமெரிக்க தொழிலாளி ஒருவருக்கு கிடைப்பதை விட மிக மிக அதிகம் ஆகும்.
தொழிலாளிக்கு ஆண்டுக்கு சராசரியாக 11 நாட்களே விடுமுறை கிடைக்கிறது. இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை நான்கே ஆண்டுகளில் எடுத்துள்ளார்.
இத்தனை நாட்கள் ஜோ பைடன் விடுமுறை எடுத்தமையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலை, உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது சரியா எனக் கேள்வி எழுப்பியெழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், அந்நாட்களில் நாட்டை வழிநடத்தியவர்கள் யார் என்றும் கேட்டுள்ளன.