இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகள் முழுவதிலும் அலைபேசிகளை தடை செய்யும் சட்டத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறனதொரு ஒரு புதிய சட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முன்வைக்கும் எம்.பி.யின் முயற்சியை கல்வி நிபுணர்களும் தொழிற்சங்கங்களும் ஆதரித்துள்ளன.
இதனால், சட்டப்படி இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் அலைபேசிகளை தடை செய்வதற்கான ஆதரவுகள் அதிகரித்து வருகின்றன.
“சிறுவர்கள் ஒரு நாளைக்கு அலைபேசியில் மணிக்கணக்கில் மோசமான அல்லது எதிர்மறையான செய்திகளைப் படிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் செயல்பாடு பரவலான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என மேற்படி மசோதாவின் பின்னணியில் உள்ள தொழிலாளர் எம்.பியும் முன்னாள் ஆசிரியருமான ஜோஷ் மக்அலிஸ்டர் (Josh MacAlister) தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்க வழிகாட்டுதல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஏற்கெனவே அலைபேசி உபயோகிப்பதற்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன.
மக்அலிஸ்டர் எம்.பி குறித்த வழிகாட்டுதலை சட்டமாக மாற்ற விரும்புகிறார். மேலும், அவர் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கான தடையை “சீட்பெல்ட் சட்டம்” (Seatbelt legislation) என்று அழைக்கிறார்.