பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் 09 மாதங்களுக்கும் மேல் சிக்கிக்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா கரைக்கு அருகில் கடலில் விழுந்த விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.
அடுத்த சில நாள்களுக்கு வீரர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படும். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என நாசா அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவரும் முயற்சி பிற்போடப்பட்டது!
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்குத் திருப்பி வர முடியாத நிலையில், கடந்த 2024 ஜூன் மாதத்திலிருந்து விண்வெளியில் சிக்கியிருந்தனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட போயிங் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாமல் இருந்தது.
இந்நிலையில், அவர்களை அழைத்து வரும் விண்கலன், கடந்த 12ஆம் திகதி புறப்பட்டு, இன்று (19) வெற்றிகரமான பூமிக்கு திரும்பியுள்ளது.