லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட மின்தடையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
துணை மின் நிலையத்தில் தீ ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, விமான நிலைய சேவைகள் முழுமையாக மூடப்பட்டன. பின்னர் நிலைமை சீர்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சுயேச்சை வாரிய உறுப்பினரும் இங்கிலாந்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான ரூத் கெலி, விமான நிலைய மின் தடை குறித்த மறு ஆய்வை நடத்தவிருக்கிறார்.
அவர் நெருக்கடி நிர்வாகத் திட்டத்தையும் மின்தடை சம்பவம் கையாளப்பட்ட விதத்தையும் மறு ஆய்வு செய்வார் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள் : ஹீத்ரோ விமான நிலையம் மூடல்.. ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு
பயணங்களை மீண்டும் தொடங்கிய ஹீத்ரோ விமான நிலையம்
மின் தடையை விசாரிக்க இங்கிலாந்தின் எரிசக்தி அமைச்சு தனி விசாரணை நடத்துகிறது.
துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய அம்சம் ஏதுமில்லை என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.