புதிதாக பிறந்த ஆண் சிசு ஒன்றின் சடலம், மேற்கு லண்டன் தேவாலயத்திற்கு வெளியே ஷாப்பிங் பையில் நேற்று செவ்வாய்கிழமை மதியம் 12:46க்கு கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த சிசுவின் தாயை முன்வருமாறு, மேற்கு லண்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டிங் ஹில்லில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்திற்கு வெளியே இன்று புதன்கிழமை (26) காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மெட் பொலிஸ் அதிகாரி மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
அதில், “எனது முன்னுரிமை தாயின் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் உள்ளது. அவர் சிசுவை சமீபத்தில் பெற்றெடுத்திருப்பதால், நாங்கள் அவரது நல்வாழ்வைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம்.”
“அவர் மிகவும் பயத்தில் இருப்பார் மற்றும் மிகவும் கடினமான நேரத்தை அவர் கடந்து செல்வார் என்று எனக்குத் தெரியும்.”
“நீங்கள் குழந்தையின் தாயாக இருந்தால், இன்று இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் முன்வந்து எமது உதவியைப் பெறுமாறு நான் உங்களிடம் நேரடியாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறினார்.
தேவாலயத்திற்கு வெளியே பையில் கிடந்த சிசுவை தேவாலயத்தின் ஊழியர் ஒருவர் கண்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் விரைந்த போதிலும் பிறந்த ஆண் சிசு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.