அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால், ஐரோப்பிய பங்குகள் சரிந்துள்ளன.
சுமார் 16 மாதங்களுக்குப் பின்னர் திடீரென இவ்வாறாக சரிவு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% சரிந்தது. அது COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவாகும்.
ஜெர்மனியில் பங்குச் சந்தை 6.6% சரிந்தது. குறிப்பாக Commerzbankஇன் பங்கு 10.7 சதவீதத்துக்கு இறங்கியது. Deutsche Bank இன் பங்கு 10 சதவீதம் சரிந்தது.
பாதுகாப்புக்கான செலவினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த ஆயுத உற்பத்தியாளர்களின் பங்குகளும் சரிந்தன.
Tankmaker Rheinmetallஇன் பங்கு 23.7 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
Hensoldt, Rheinmetall மற்றும் Renk ஆகிய பங்குகளின் சரிவு 17 விழுக்காட்டுக்கும் 21 சதவீதத்துக்கும் இடையே இருந்தது.