4
தினமும்
எனக்குள் உதிக்கிறது ஒரு சூரியன்..
கதிர்களைப் பரப்பி மேலெழுகையில் அமுலாகும்
ஊரடங்குச் சட்டம்..
அந்தரவெளியில் தனித்தலையும் சூரியனைக் கைவிலங்கிட்டு இழுத்துச் செல்வார்கள்..
கதிர்களைச் சுருட்டி மூலையில் ஏறிவார்கள்..
கொடுவெப்பம் கரைந்து ஓடும்
அறையெங்கும்..
அந்தியில்
ஒளி சப்பிய இருளின் தொண்டைக் குழிக்குள்
கரும் புள்ளிகளுடன் காணாமலாக்கப்படும்..
மீளவும்,
அதிகாலையைக் கிழித்து எனக்குள் உதயமாகும்..
ஓர் இளஞ் சூரியன்..
– சுடர் நிலா –