அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost), 1.4 பில்லியன் கத்தோலிக்க உறுப்பினர்களின் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பாப்பரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தேவாலயத்தின் புகைப்போக்கிலிருந்து வெண்புகை தென்பட்ட சுமார் 70 நிமிடங்கள் கழித்து சென் பீற்றர் பசிலிக்கா தேவாலயத்தின் மாடி முகப்பில் போப் லியோ தோற்றமளித்தார்.
போப் லியோ (Leo) என்று அழைக்கப்படும் பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட்க்கு வயது 69 ஆகும்.
அவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் பேராயர் பதவியில் உள்ள 133 பாதிரியார்கள் கலந்துகொண்டனர். இத்தாலி மொழியில் உரையாற்றிய புதிய போப், அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.
அவர் தமது பணியின் பெரும்பாலான பகுதியைப் பெருவில் கடந்ததுடன், 2023ஆம் ஆண்டில்தான் அவர் பேராயர் பதவியை ஏற்றார்.
இதுவரை அவர் குறைவான ஊடக நேர்காணல்களில் கலந்துகொண்டுள்ளார் என்றும் மிக அரிதாகப் பொதுவெளியில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது
புதிய போப் பற்றிய சில தகவல்கள் இதோ…
– சிக்காகோ நகரில் 1955ஆம் ஆண்டு பிறந்தவர்.
– கத்தோலிக்க Augustinian குழுவைச் சேர்ந்தவர்.
– பெருவில் சிக்லாயோ நகரில் 2015ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை ஆயராக இருந்தார்.
– அவருக்கு பெரு நாட்டின் குடியுரிமையும் உள்ளது.
– ரோமிலுள்ள Pontifical கல்லூரியிலிருந்து தேவாலயச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.