கால் நடந்த திசை
காப்பொன்று தேடியது.
காடையர் காலிடை
அது வென்று ஆனது.
கோழிக் குஞ்சை
பருந்துக் கூட்டில்
விட்டு கேட்டோம்
பாதுகாத்து கொடுத்திட.
விந்தை மிக்க
காலச் சுழற்சியில்
எதிரியின் வீட்டில்
வாழ்ந்த படி பேசுகிறோம்.
எங்கள் வீட்டில்
இப்போதெல்லாம் எதிரி
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
எங்கள் சிலரின் மனங்களிலும்.
நடந்தவை நாளையும்
நடந்தேறி போகும்.
காலமொன்று நோக்கி
எதிரி நகர்ந்து போகிறான்.
இடம் பறித்து அவன்
பௌத்தம் விதைத்து கொள்ள
அவன் காட்டில் இருந்த
விளைச்சல் காய்ந்து போகிறது.
விளைவுகள் வெறுமை
என்றொரு போக்கில் போக
நாளை வந்து கிடப்பான்
எங்கள் காலடியில் அவன்.
இந்த விதியை மாற்ற
அவனால் முடியாது
இந்த பிறப்பொன்றில்
குணம் மாறாத எதிரியல்லவா?
திடம் கொண்ட நாம்
தமிழரென்ற அடையாளம்
அதனை இழந்து விடாது
வீச்சோடு காத்திருப்போம்.
ஒருநாளில் வந்த
அழிவிலும் ஒரு ஆக்கம்
நாளை நமக்காக இருக்கிறது.
காலச் சூழ்ச்சியில்.
மூட்டைகளை காவி
முடித்துக் கொண்ட எங்கள்
வீர வாழ்வை நாம்
மீண்டும் வாழ்வோம்
தலை சாய்ந்த போது
பட்ட அனுபவங்கள் போதும்
இனியொரு முறை நாம்
தலை சாய்ந்து விடாதிருக்க.
நதுநசி