தேவையானவை
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் – 2-3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள்
தேன் -1 டீ ஸ்பூன்
செய்முறை
மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எண்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.
முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.
இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.