தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
தேங்காய் துருவல் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கிழங்கு பிட்டு செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கு தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்பு அவற்றை துருவிக் கொள்ளவும், பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பின்பு அவற்றில் இருக்கும் பாலை பிழிந்து வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும்.பின்பு பிட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்றி கொள்ளவும்.
பின்பு பிட்டு குழலை எடுத்துக்கொண்டு, அதனுள் சிறிய ஓட்டை உள்ள தட்டை வைத்து, முதலில் தேங்காய் துருவலை சிறிதளவு போட்டு கொள்ளவும், பின்பு மரவள்ளிக் கிழங்கு துருவலை போடவும், இவ்வாறு தொடர்ந்து தேங்காய் துருவல், மரவள்ளிக் கிழங்கு துருவல் என்று குழலை நிரப்பவும்.
குழல் நிரம்பியதும் இந்த குழலை பிட்டு பாத்திரத்தில் இணைத்து, வேக வைத்து இறக்கினால் சுவையான மரவள்ளிக் கிழங்கு பி ட்டு தயார்.