செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் புத்தாண்டும்… புதிய தீர்மானங்களும்….

புத்தாண்டும்… புதிய தீர்மானங்களும்….

2 minutes read

இந்த புத்தாண்டில் நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.

புத்தாண்டு உறுதிமொழிகள்புத்தாண்டு பிறந்திடும் போது நம் வாழ்வில் புதிய எண்ணங்கள் உதயமாகும். அந்த வகையில் நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.

பொதுவான புத்தாண்டு உறுதிமொழிகள்
உலகளவில் எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகள் என்பது உடல் நலத்தை மேம்படுத்துதல், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்தல், மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை குறைத்தல் போன்றவையாகும். அதுபோல் நேர்மறை எண்ணங்களை வளர்க்க செய்வது, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், அதிக மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமான சூழலை பேணுதல் போன்றவாறு நமது உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன.

பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல், கடன்களை அடைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள், கடன்கள் பெறாமல் வாழ்க்கையை நடத்துவது போன்றவையும், செய்யும் பணி சார்ந்த உறுதி மொழிகள் எடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தான் செய்கின்ற பணியில் முன்னேற்றம் பெறுவது, பதவி உயர்வது, அதிக சம்பளம் பெறுவது போன்ற லட்சியங்களை அடைய ஏற்ற உறுதிமொழிகளை ஆண்டின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.

தொழில் செய்வோர் தங்கள் தொழிலை இந்தாண்டு கூடுதல் லாபத்துடன் செய்ய முயற்சிப்பது, தொழிலை விரிவு படுத்துவது, புதிய கூடுதல் தொழில்களை உருவாக்குவது, போன்ற புதிய உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு உறுதிமொழிகள் என்பவை நம் வாழ்வை வளப்படுத்துவது, மேம்படுத்துவதுடன் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு உந்துதலாகவும் அமைகின்றன.

பிரபலமான புத்தாண்டு தீர்மானங்கள் தினமும் அதிகாலையில் எழுந்திடுவேன், நேர மேலாண்மையை கடைபிடிப்பேன், புத்தாண்டில் என் உடல் எடையை குறைத்து கொள்வேன். ஆக்கமுடன் படிக்க முயல்வேன், என் அலுவலகம் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பேன். தினசரி நடைபயிற்சி மேற்கொள்வேன், இந்தாண்டில் புதிய வீடு வாங்குவேன், குடும்பத்தினர் உடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வேன், புதிய கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்வது, சமூக நலப்பணிகளை மேற்கொள்வது என்பது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More