செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் நகத்தை கொண்டு ஒருவர் குணத்தை சொல்லலாம்.

நகத்தை கொண்டு ஒருவர் குணத்தை சொல்லலாம்.

2 minutes read

நகத்தை பார்த்து உடல் நல குறைபாடுகளை கண்டறிவது போலவே ஒருவரின் குண நலன்களையும் கண்டறிந்து விடலாம். ஒவ்வொரு வடிவ நகமும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.

நீளமான நகம்: நீளமான நகம் கொண்டிருப்பவர்களுக்கு வலது மூளை நன்றாக வளர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர்கள் கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நுணுக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். அதேவேளையில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பார்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும் செய்வார்கள்.

அகன்ற நகம்: நகங்கள் அகலமாக இருப்பதால் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது பேச்சாற்றலை கொடுக்கவும் வல்லது. அதனால் இந்த வகை நகம் கொண்டவர்கள் பொதுவாக சொற்பொழிவாளராக இருப்பார்கள். மனதில் நினைப்பதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.

முட்டை வடிவம்: இந்த வகை நகம் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவராக இருப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் பொறுப்புணர்வும் அதிகம். சுற்றி இருப்பவர்கள் பிரச்சினையில் ஈடுபடும்போதெல்லாம் மத்தியஸ்தராக இருந்து சமாதானம் செய்து வைப்பார்கள். இவர்களின் ஆளுமை பலராலும் விரும்பப்படும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாக பழகுவார்கள். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நபராக விளங்குவார்கள்.

சதுர வடிவம்: விடாமுயற்சியும், தைரியமும் கொண்டவர்களாக விளங்குவார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் இவ்வகை நகம் கொண்டவர்கள். எப்போதும் இறுக்கமான மன நிலையுடன் இருப்பார்கள். தலைக்கனமும் கொண்டிருப்பார்கள். பிடிவாதத்தை சற்று தளர்த்தி, சமாதானமாக செல்வது நன்மை பயக்கும்.

முக்கோணம்: முக்கோண வடிவ நகம் கொண்டவர்கள் புதிய யோசனைகளை வழங்கும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களிடம் ஐடியாக்களுக்கு பஞ்சமே இருக்காது. மற்றவர்கள் தவற விடும் சின்ன சின்ன விஷயங்களை கூட உன்னிப்பாக கவனித்து சரி செய்துவிடுவார்கள். தலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால், எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள். தங்களை சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பாதாம்: பாதாம் வடிவ நகம் கொண்டவர்களிடம் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். உண்மையானவர், நேர்மையானவர், கண்ணியமானவர், அமைதியானவர் என்று பெயரெடுப்பார்கள். ஆனால் சகிப்பு தன்மை குறைவாக கொண்டிருப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் குறுகிய மனநிலை கொண்டவராக இருப்பார்கள். சட்டென்று கோபம் கொள்ளவும் செய்வார்கள். அந்த சமயங்களில் சற்று ஒதுங்கி இருந்து மனதை குளிர்விப்பது நல்லது.

கூர்மையான நகம்: இவர்கள் லட்சியவாதிகள். தங்கள் குறிக்கோளை அடைவதற்காக கடுமையான உழைப்பை கொடுப்பதற்கு தயங்கவே மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும் அது லட்சியத்தை நோக்கி முன்னேற உதவும் என்று தெரிந்தால் அதனை பின்பற்றி நினைத்ததை சாதித்துவிடுவார்கள். ஆனாலும் இவர்களிடத்தில் சகிப்பு தன்மையும், பொறுமையும் குறைவாக இருக்கும். அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது சட்டென்று பொறுமை இழந்துவிடுவார்கள்

நன்றி: மகளீர் பக்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More