நொறுக்குத்தீனி, கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது.
குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர், அவர்களது முக்கியப்பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையை காட்ட வேண்டும்.
காலை நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.
இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறையாக, ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதை பட்டியலிட்டு கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். ஆனாலும், குழந்தைகள் அனைவரும் ஒரே வகை உணவை கொண்டுவந்தால் எப்படி தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
சதை பிடித்து வளர்கிற பருவத்தில் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை குழந்தைகள் வெறுப்பது இயல்புதான். பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப்படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவையல்ல.
ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் கார்போஹைட்ரேட் உணவையும், உடல் கட்டுமானத்துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற்கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த்தமாக தேர்வு செய்வதில்லை.
அதே நேரத்தில், நொறுக்குத்தீனி, கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது.
இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவை குழந்தை பருவத்தில் இருந்தே பழக்கிவிட்டால் அது அவர்களுக்கு பிடித்த உணவாகி விடுகிறது. இதனால் உடல் நலத்துக்கு கேடு விளைவுக்கும் பண்டங்களை நிச்சயமாக குழந்தைகள் விரும்பமாட்டார்கள்.
நன்றி | மாலை மலர்