கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும்.
இப்பொழுது மாநில அரசு கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி செலவு செய்து வருகிறது. எனவே பள்ளிப்படிப்பு என்பது அனைவருக்கும் எளிதாக கிடைத்து வருகிறது. இதே போல் புதுச்சேரியில் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற படிப்புகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே உயர்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கல்விக்கடனை உடனடியாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி | மாலை மலர்