செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்

குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்

2 minutes read

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.

குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமான மனநிலையும், சிறந்த செயல்பாடுகளையும் உடையவர்கள். ஆனால் அந்த உணர்வுகள் அடிக்கடி தடுத்தலுக்கும், கட்டுப்படுத்துதலுக்கும் உட்படுகிறது. எது சரி, எது தவறு என்ற வரையறைகளை மிகச் சரியாக கடைப்பிடிப்பது போல் பெரியவர்கள், குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்.

அது குழந்தைகளிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். யாரும் இல்லாத இடத்தில் குழந்தைகள் தனியாகவே விளையாடுவார்கள். அப்போது தானாகவே விதிகளை உருவாக்கி கொண்டு தனியாக பேசிக்கொண்டு உற்சாகமாக விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் ஒரு அதீத தன்மை இருக்கும். அதுவே குழந்தைகள் தன்னை மறந்த உயர்நிலை செயல்பாடாக இருக்கும். அதில் குழந்தைகளின் ஆற்றல், திறன், கற்பனை, மனநிலை ஆகியவற்றை காணமுடியும்.

இதுமட்டுமின்றி குழந்தைகள், பிற குழந்தைகளுடன் விளையாடும்போது தங்களின் உண்மையான இயல்புகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். அதை கண்டுகொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகளின் திறனை மேம்படுத்த வேண்டும். தனித்திறமைகள் தான் ஒருவனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதை மழுங்கடிக்கும் வேலைகள் குழந்தைகளிடம் நடந்து விடக்கூடாது.

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களின் திறன்களை முடக்கியோ, ஊனப்படுத்தியோ விடக்கூடாது. மேலும் அவர்களுக்கு இயல்பாக வழங்கும் சலுகைகளைகூட தடுத்து விடக்கூடாது.

குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள். சுமையோ, பாரமோ, மனஉளைச்சலோ அவர்களின் இயல்பை பாதிக்கச்செய்து விடும். புதிய எண்ணங்களையோ, செயல்களையோ குழந்தைகள் வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கும். அதை ஊக்குவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது குழந்தைகளுடன் நாம் விளையாட வேண்டும். குழந்தைகளை போட்டியில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்கவும், சிறியவர்களோடு இணங்கியும் செயல்பட வேண்டியதன் நுட்பத்தை சொல்லி கொடுக்க வேண்டும். நண்பர்களை தேர்வு செய்வதில் குழந்தைகளின் மனநிலை சுவாரசியமானது. அதில் தடையோ, மறுப்போ தெரிவிக்கக்கூடாது. பேதமற்ற மனநிலை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு உரிய வழிகாட்டுதலையும், கண்காணிப்பையும் எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது. அந்த உரிமை என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஒத்த திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும். எதிர்மறையாக இருந்து விடக்கூடாது என்பது மிக முக்கியம்.

நெருக்கடி, சவால்களை தனியாக எதிர்கொள்ள குழந்தைகள் தயாராக வேண்டும். நிச்சயம் வெற்றி பெற்று வருவார்கள் என்று தைரியம் கொடுங்கள். தன்னம்பிக்கையோடு இருக்க பயிற்சி அளியுங்கள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்ற சில அடி தூரம் பயணிக்க வேண்டும். அதற்கான உறுதியை மட்டும் கைவிடாது இருந்தால், குழந்தைகள் எதிலும் வெற்றி வாகை சூட தகுதி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More