பாத்திரங்களை பிளாஸ்டிக் அல்லது சிலிகான் பிரஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் அவை பயன்படுத்தப்படாத போது உலர்ந்திருக்கும். ஆனால் ஸ்பான்ச் கொண்டு பாத்திரங்களைக் கழுவும் போது, அந்த ஸ்பான்ச்சில் நீண்ட நேரம் ஈரம் இருக்கும்.
இதனால் அதில் பாக்டீரியா அதிகம் வளரும்.
இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள அழுக்கு பாத்திரங்களைக் கழுவாமல் தூங்கக்கூடாது.
அழுக்கு பாத்திரங்களில் பாக்டீரியாக்களானது 4 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.
இதை அவ்வப்போது கழுவாமல் விட்டுவிட்டால், அந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் பரவ ஆரம்பித்துவிடும்.
எனவே அழுக்கு பாத்திரங்களை சேர்த்து வைக்காமல் அவ்வப்போது கழுவிவிடுங்கள்.