இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உலகின் 10 பகுதிகளில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட (மெக்காஃபி. )McAfee ஆய்வில், இந்தியக் குழந்தைகள் இளைவயதிலேயே மொபைல் பயனபடுத்தும் அறிவை அடைகிறார்கள் என தெரியவந்து உள்ளது.
ஆய்வின்படி, இந்தியாவில் 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட 7 சதவீதம் ஆகும் அதிகம்.
இது இந்தியாவில் குழந்தைகளை ஆன்லைன் ஆபாயங்களுக்கு அதிகமாக உட்படுத்த வழிவகுத்தது.மேலும், சில 22 சதவீத இந்திய குழந்தைகள் இணைய அபாயத்தை அனுபவித்துள்ளனர், இது உலகளாவிய சராசரியான 17 சதவீதத்தை விட 5 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் 90 சத்வீத பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாவலர்களாக தங்கள் பங்கை ஒப்புகொண்டு உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 56 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பார்ஸ்வேர்டையும் 42 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பாஸ்வேர்டையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியப் பெற்றோர்களிடையே இணைய அச்சுறுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் பற்றிய கவலை 47 சதவீதமாக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 57 சதவீதத்தை விட 10 சத்வீதம் குறைவாகும்.
மேலும், ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மெக்காஃபி மார்க்கெட்டிங் துணைத் தலைவர் சச்சின் பூரி கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், அவர்களது இணைக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ள ஆன்லைன் பாதுகாவலர்களாக வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவை பெற்றோருக்கு வழங்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.
நன்றி | மாலை மலர்