கண்கள் நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டவை. ஆகவே தினம் கண் பயற்சி மிக முக்கியம் தலையை நேர வைத்து, இரண்டு கட்டை விரல்களை சேர்த்து வைத்து கொண்டு தலையை ஆட்டாமல், கைகளை மேலும் கீழுமாக, இடது வலதுமாக நகர்தல் வேண்டும். தலையை ஆட்டாமல், கை அசைவிற்கு பார்வையை மட்டும் நகர்த்துதல் வேண்டும். இதனால் கண்களின் அணைத்து பாகங்களும் நன்கு செயல்பட்டு புத்துணர்வு பெறும்.கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவது மிகவும் முக்கியம்.
கல்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கண்களுக்கு நல்லது.
பால் உணவுகள், கீரை, முட்டை, ஒரேஞ்சு பழம் மற்றும் காய்கள் கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.
மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். எனவே தினமும் உணவில், மீன் சேர்ப்பது நல்லது.
கண்களில் தூசு விழுந்தால், கண்களை கசக்கக் கூடாது; தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். கண்களில் எண்ணெய் விடுவது முதலிய செயல்களை செய்யக் கூடாது.
விளக்கெண்ணெய் மற்றும் ஒலிவ் எண்ணெய் கலந்து இமை மற்றும் புருவத்தில் தடவி வர கண்கள் வறட்சி நீங்கும். மேலும் புருவம் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் நன்கு வளரும். கண்கள் அழகும் ஆரோக்கியமும் பெறும்.கண்கள் சுற்றி வட்ட வடிவில் ஒலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால்,கண்களின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். சுருக்கங்கள் மறையும்.