முதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது.
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நெப்கின்கள், காகித கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டலங்கள், ஜிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள் (உருக்கினாலான பொருட்கள்), புற ஊதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை இப்படிக் குறிப்பிடலாம்.
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல பஞ்சு தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு, முதலாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பஞ்சுப் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்தி வந்த செவிலியர்கள், மாதவிடாய்க் காலத்தில் இதனைப் பயன்படுத்திக்கொண்டனர். அதைத் தொடர்ந்தே நெப்கின் உருவானது.
இது தவிர, மாவியம் எனப்படும் செல்லுலோஸ்களை அயர்ன் செய்து மெலிதான தாள் போல செய்வதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் காகித கைத்துண்டுகள் உருவாகின.
இணைய இதழ்