* முல்தானி மிட்டியுடன், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, ‘பேஸ் பெக்’குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறம் மற்றும் அழகை பாதுகாக்கலாம்
* முகத்தில் வரும் கரும் புள்ளி, வெண் புள்ளி போன்ற பிரச்சினைகளுக்கு, முல்தானி மிட்டியுடன் வேப்ப இலையின் விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும், முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளும், வெண் புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்
* கோடையில் முல்தானி மிட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு, முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மிட்டியுடன், சந்தனத்தை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்
* முகத்தில் முல்தானி மிட்டியை தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீரில் கழுவினால், முகம் அழகாகவும், பளபளப்பாக இருக்கும்.
* முகத்தில் பருக்கள் மற்றும் அதிகமான எண்ணெய் சுரப்பு பிரச்சினை உள்ளோர் பன்னீருடன், முல்தானி மிட்டியை குழைத்து, ஒரு சிறிய, ‘ப்ரஷ்’ பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப் பிரச்சினைகள் சரியாகும்.
நன்றி மித்ரன்