0
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி, சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்துவிடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
- பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து, சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம்.
- வெண்ணெயுடன் ஒரெஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
- இரவு படுக்கும்போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால், குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சினை தடுக்கப்படும்.
- சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும், உதட்டில் வெடிப்பு, புண் வரும். இவர்கள் தேங்காய்ப் பால் குடித்து வந்தால், விரைவில் நல்ல பலனை காணலாம்.
நன்றி | வீரகேசரி