செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்

2 minutes read

திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு.

நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

சமீபகாலமாக திருமண நிச்சயதார்த்தம் போல் மணப்பெண்ணுக்கு மருதாணி இட்டு அழகு படுத்துவதும் தனிச்சடங்காக ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தில், இந்த விழாவின் போது மணப்பெண்ணை நடுவில் நிறுத்தி தோழிகள் புடைசூழ நின்று அவருக்கு மருதாணி இடுவதும், பாட்டுப்பாடுவதும் தனிச்சிறப்பு ஆகும்.

தற்போது ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து திருமணங்களிலும் இத்தகைய சடங்குகள், திருமணத்தைப்போன்ற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாணத்தால் முகம் சிவந்து நிற்கும் மணப்பெண்களின் கைகளை சிவக்கச் செய்யும் மருதாணி பற்றி இனி பார்ப்போம்.

மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமின்றி புறங்கையிலும், மூட்டு வரை அழகிய ஓவியம் போல் மருதாணி இடப்பட்டு வருகிறது.

அரபிக் வடிவம், பாகிஸ்தான் வடிவம் என பல்வேறு வடிவங்களில் மருதாணி இடப்பட்டாலும், ராஜஸ்தானி வடிவம்தான் தற்போது மிக பிரபலம். அழகிய வடிவமைப்புகள் செய்வதற்கு சிலர் ஒருநாள் முழுவதையும் எடுத்துக் கொள்வது உண்டு.

நல்ல ஓவியத்திறன், கற்பனைத் திறன் உள்ளவர்கள் மூலம் மருதாணி வைத்துக்கொண்டால் அது காண்போரை கவரும் விதத்தில் அமையும்.

மருதாணி நன்கு சிவப்பு நிறமாக தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதற்காக சில எளிய முறைகளை பின்பற்றினால்போதும்.

யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி, பின்னர் மருதாணி இட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.

மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து, மருதாணி இட்ட கைகளை லேசாக சூடுபடுத்துவது, கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் ஆவிபிடிப்பது போன்றவை அடர்த்தியான நிறம் கிடைக்கச் செய்யும்.

சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதும் நல்ல பலன் கிடைக்க வழிவகுக்கும்.

மருதாணி இட்டபின் குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.

மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும். சோப்பு, எண்ணை போன்றவற்றை பயன்படுத்தும்போது மருதாணியின் நிறம் மங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதாணி இட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் எல்லாம் அது பட்டு, துணிகளில் கறை ஏற்படும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை (கிளவுஸ்) போட்டுக் கொள்ளலாம்.

மருதாணியின் நிறம் மங்கத் தொடங்கும்போது, சில இடங்களில் அழிந்தும், சில இடங்களில் அடர்த்தியான நிறத்துடனும் காணப்படும்.

இது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இவ்வாறான நேரத்தில், உடல் ஒப்பனை மருந்து (காஸ்மடிக் பாடி பிளீச்) மூலம் கைகளை கழுவி மருதாணியின் நிறத்தை முற்றிலும் அழித்துவிடலாம்.

நன்றி | Tamil Beauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More