தலை முடி உதிர்வதற்கு முதல் காரணம் நன்றாக உணவுகளை எடுக்காமையே அதாவது எமது உணவுகளின் தன்மைகளை தெரிந்து அவற்றை எடுத்து கொள்ள வேண்டும் . சூட்டை உண்டாக்கும் உணவுகள் நிச்சயம் முடியை உதிர செய்யும்.
எனவே உடலை தேவையான அளவு குளிர்மையாக வைத்து கொள்ளும் தயிர் ,மோர் , நெல்லி, அலோவேரா போன்ற உணவுகளை உண்ணுவது முக்கியம் அடுத்து எண்ணெய் குளியல் நன்றாக எண்ணையை தலைக்கு தேய்த்து தலை குளிக்க வேண்டும் அதற்கு நீங்கள் சிறிது தேங்காய் எண்ணெய்யை பயன் படுத்தலாம் அல்லது அம்மா காலங்களில் பயன் படுத்தும் பாரம்பரிய எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
தலை முடிக்கு பயன் படுத்தும் ஷாம்பூ வகைகளில் மூலிகை சாரம் நிறைந்த அலோவேரா, தேங்காய் எண்ணை , மருதாணி ,செவ்வரத்தை என இந்த இங்கிரிடியன்ஸ் கலந்துள்ளதா என பார்த்து வாங்கி பயன்படுத்துவது மிக நல்லது.
இவை அனைத்தையும் விட அரப்பு , சிகாய்காய் வைத்து குளிப்பது மிக நல்லது. இப்படி தொடர்ந்து முயற்சிக்க உங்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் முடியும் உதிர்வது குறையும்.